ஜனநாயகன் பட வழக்கு வாபஸ்-மறு ஆய்வு குழுவை அணுக பட குழு முடிவு .

by Admin / 10-02-2026 11:18:50am
ஜனநாயகன் பட வழக்கு வாபஸ்-மறு ஆய்வு குழுவை அணுக பட குழு முடிவு .

நடிகர் விஜய் நடித்து வெளிவர இருந்த ஜனநாயகன் படம் தணிக்கை சான்று தொடர்பாக வழக்குகளில் சிக்கியிருந்த நிலையில் சட்டப் போராட்டத்திற்கு முடிவுக்கு கொண்டு வரும் விதமாக பண தயாரிப்பு நிறுவனம் வழக்கை வாபஸ் பெற்றுள்ளது. ஜனநாயகன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே..வி .என் புரொடக்ஷன்ஸ் தணிக்கை வாரியத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் கடிதம் வழங்கியது. இதனை ஏற்றுக் கொண்டு நீதிபதி பி. டி. ஆஷா இன்று வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். படத்தின் தணிக்கை சான்றிதழ் தொடர்பான சிக்கல்களை தீர்க்க தணிக்கை வாரியத்தின் மறு ஆய்வு குழுவை அணுக பட குழு முடிவு செய்துள்ளது. சட்டரீதியான சிக்கலை தவிர்த்து படத்தை விரைவில் வெளியிட இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பொங்கல் வெளியீடாக வரவேண்டிய இப்படம் ,தணிக்கைச் சான்றிதழ் தாமதத்தால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.. தற்பொழுது வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளதால் ,மறு ஆய்வு குழு படத்தை ஆய்வு செய்து தணிக்கை சான்று வழங்கிய பின்னர் பட வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வமாக பட நிறுவனம் தேதியை வெளியிடும்.

 

Tags :

Share via