பெண்களுக்கு அறிவு தான் உண்மையான அழகு-முதலமைச்சர் மு .க. ஸ்டாலின்
இன்று சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் கிறிஸ்தவ அமைப்புகள் சார்பில் தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலினுக்கு பாராட்டு மற்றும் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. விழாவில் பேசிய முதலமைச்சர் மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். பெண்களுக்கு அறிவு தான் உண்மையான அழகு என்றும் படிப்பு தான் அவர்களுக்கு உண்மையான அணிகலன் என்றும் இன்றைய போட்டி உலகில் நிலைத்து நிற்க ஒரு பட்டப் படிப்பு மட்டும் போதாது வேலைக்கு சென்றாலும் ஆர்வமுள்ள துறையில் ஆராய்ச்சி படிப்பு வரை தொடர்ந்து பயில வேண்டும் என்றும் குழந்தைகளின் கல்விக்காக தங்கள் வாழ்நாள் சேமிப்பை செலவிடும் பெற்றோர்களின் நம்பிக்கையை காப்பாற்றி அவர்களுக்கு பெருமை தேடித் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். .வெற்றியாளர்களின் நீண்ட பயணங்களில் இருந்து கற்றுக்கொள்ளும் பாடமே ஒருவரை பக்குவப்படுத்தும் என்றும் அத்தகைய பக்குவத்துடன் அடையும் வெற்றி நிலைத்து நிற்கும் என்றும் மாணவர்களிடம் கூறியதோடு கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது .கஷ்டப்படாம கிடைத்த எதுவும் நிலைக்காது என்று நடிகர் ரஜினிகாந்த் திரைப்பட வசனத்தை பேசி மாணவர்களின் கவனத்தை ஈர்த்தார்
Tags :



















