விடுமுறைத்தினமென்பதால் குற்றால அருவிகளில் குவிந்த சுற்றுலாப்பயணிகள் 

by Editor / 06-08-2023 08:27:40am
விடுமுறைத்தினமென்பதால் குற்றால அருவிகளில் குவிந்த சுற்றுலாப்பயணிகள் 

தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான குற்றாலத்தில் தற்பொழுது சீசன் காலம் என்பதால் நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு திரண்டு வந்த வண்ணம் உள்ளனர் ஆனால் குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு பொய்த்து போனதின் காரணமாக அறிவியலுக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது இதன் தொடர்ச்சியாக  நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் திரண்டுவந்து நீண்ட வரிசையில் இன்றும் குளித்து சென்ற வண்ணம் உள்ளனர் இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை இல்லாத நிலை நீடித்து வருவதால் குற்றாலம் பேரருவி ஐந்தருவி, சிற்றருவி, உள்ளிட்ட அனைத்து அருவி களிலும் நீர்வரத்து குறைந்த அளவு கொட்டுகிறது.இருப்பினும் இன்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அதிகாலைமுதலே அதிகரித்து காணப்படுகிறது. மேலும் இங்குள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது மழை இல்லாத நிலை தொடர்ந்து நீடித்து வருவதால் அருவிகளுக்கு வனப்பகுதியில் இருந்து வரும் நீரின் அளவும் வெகுவாக குறைந்துள்ளது குற்றால அருவிகளில் நீர் மறைத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில் உள்ள பாலருவி மற்றும் அச்சன்கோவில் பாலாறு கும்பாஉருட்டி அருவி உள்ளிட்ட பகுதிகளுக்கு திரண்டு சென்ற வண்ணம் உள்ளனர் குற்றாலம் பேரருவியில் பெண்கள் பகுதியில் குறைவாகவே தண்ணீர் கொட்டுவதால் நீண்ட வரிசையில் நின்று பெண்கள் குழு குழுவாக குளிக்க காவல்துறையினரால் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் வெயிலின் தாக்கமும் காலை முதலே அதிகரித்து காணப்படுகிறது.

 

Tags :

Share via