அமெரிக்கா வாஷிங்டனில் , டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து உயர்மட்டக் கூட்டம் தோல்வியில் முடிந்தது. ,
அமெரிக்கா வாஷிங்டனில் , டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து இடையே நடந்த உயர்மட்டக் கூட்டம் தோல்வியில் முடிந்தது.
டென்மார்க் வெளியுறவுத் துறை அமைச்சர் லார்ஸ் லோக்கி ராஸ்முசென் மற்றும் கிரீன்லாந்து வெளியுறவுத் துறை அமைச்சர் விவியன் மோட்ஸ்ஃபெல்ட் ஆகியோர் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரைச் சந்தித்துப் பேசினர்.
கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் அல்லது அதன் முழுக் கட்டுப்பாட்டைப் பெற வேண்டும் என்ற அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் விருப்பத்தில் அமெரிக்க தரப்பு உறுதியாக இருந்தது. . டென்மார்க் - கிரீன்லாந்து அமைச்சர்கள் கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல என்றும், இது தங்கள் இறையாண்மைக்கு எதிரானது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
பேச்சுவார்த்தையில் உடனடி உடன்பாடு எட்டப்படாததால், பாதுகாப்பு கவலைகளை ஆராயவும் எதிர்காலத் தீர்வைக் காணவும் ஒரு "உயர்மட்ட பணிக்குழுவை" அமைக்க மட்டும் ஒப்புக் கொள்ளப்பட்டது.
பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, டென்மார்க்கிற்கு ஆதரவாக பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன் மற்றும் நார்வே போன்ற ஐரோப்பிய நாடுகள் கிரீன்லாந்திற்குத் தங்கள் ராணுவ வீரர்களை அனுப்பியுள்ளன.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்யா மற்றும் சீனாவின் ஆதிக்கத்தைத் தடுக்க கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றுவது அவசியமானது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இது தற்போது நேட்டோ நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags :











.jpg)







