கனடா பிரதமர் மார்க் காரனி பெய்ஜிங்கில் சீன அதிபர் ஜி பிங்கை சந்திப்பு
கனடா பிரதமர் மார்க் காரனி பெய்ஜிங்கில் சீன அதிபர் ஜி பிங்கை சந்தித்து இரு நாடுகளுக்கு இடையான புதிய ஒப்பந்தத்தை நிறைவேற்றும் பொருட்டு சென்றுள்ளார்
. இரு நாடுகளும் பரஸ்பர வர்த்தக தடைகளை நீக்க ஒப்புக்கொண்டதோடு கன்னட கனேலா விதைகளுக்கான இறக்குமதி வரியை சீனா 85 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக குறைக்க உள்ளதாகவும் இதற்காக கன்னடா 49 ஆயிரம் சீன மின்சார வாகனங்களை குறைந்த வரி விகிதத்தில் கனடா சந்தையில் விற்க அனுமதி வழங்கி உள்ளது.. அத்துடன்,
கனடா மக்கள் சீனாவுக்கு பயணம் செய்ய விசா இல்லாத அனுமதியையும் சீனா அறிவித்துள்ளது. இதனுடன் விவசாயம் ,எரிசக்தியின், நிதி, கல்வி மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு இரு நாடுகளும் உடன்பாடு தெரிவித்துள்ளன.
கடல் சார் காற்றாலை, திரவ இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் இரு நாடுகளும் ஏற்றுமதியில் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தின.இவ்ஒப்பந்தத்தின் மூலம் கனடா விவசாயிகளுக்கு 3 பில்லியன் டாலர் ஏற்றுமதி கிடைக்க வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது
. அமெரிக்கா விதித்து வரும் அதிக வரி விதிப்பின் காரணமாக கனடா தனது பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த பயணம் அமைந்துள்ளது.
Tags :


















