மதுரையில் ஜாதி மாற்றி திருமணம் வாலிபர் கொலை..?

மதுரையிலுள்ள உலக தமிழ் சங்கம் கட்டிடத்திற்கு எதிரே தலையில் கல்லைப்போட்டு இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இசக்கிமுத்து என்பவர் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டு வெளியூரில் பல வருடங்களாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், இசக்கிமுத்து சொந்த ஊருக்கு வந்தபோது படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ததால் இசக்கிமுத்து கொலை செய்யப்பட்டார் என உறவினர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
Tags : Youth murdered after marrying in Madurai over caste change?