இந்தியா வம்சாவளியினருக்கு எதிராக நடக்கும் அச்சுறுத்துகள் குறித்து இந்த ஆணையும் கவனம் செலுத்த வேண்டும் .
இந்தியாவின் ரா மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் மீது தடைகள் விதிக்க வேண்டும் என்ற அமெரிக்க சர்வதேச மத சுதந்திர ஆணையத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான பரிந்துரையை இந்தியா அதிகாரப்பூர்வமாக நிராகரித்துள்ளது. மத்திய வழி உறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இந்த அறிக்கை நோக்கம் கொண்டது மற்றும் ஒரு தலைப்பட்சமானது என்று கூறி நிராகரித்துள்ளார். இந்த ஆணையும் கடந்து சில ஆண்டுகளாகவே இந்தியாவின் நிலைப்பாட்டை சிதைத்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல்களை கொண்டும் தவறான சித்தரிப்பாக இந்தியா மீது குற்றம் சாட்டி உள்ளது என்றும் நம்பகத் தன்மையற்ற ஆதாரங்கள் மற்றும் கருத்தியல் ரீதியிலான கதைகளை நம்பி இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாகி உள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. இந்தியாவில் மத சுதந்திரம் குறைந்து வருவதாக கூறி இந்தியாவை குறிப்பிட்ட கவலைக்குரிய நாடு என அறிவிக்க வேண்டும் என்றும் ரா மற்றும் ஆர்.எஸ்.எஸ் மீது இலக்கு வைக்கப்பட்ட தடைகளை விதிக்க வேண்டும் என்றும் யூ எஸ் சி ஐ ஆர் எப் பரிந்துரைத்திருந்தது. இந்தியாவுக்கு எதிராக கருத்து தெரிவிப்பதற்கு பதிலாக அமெரிக்காவில் இந்து கோவில்கள் சிதைக்கப்படுவது மற்றும் அங்குள்ள இந்தியா வம்சாவளியினருக்கு எதிராக நடக்கும் அச்சுறுத்துகள் குறித்து இந்த ஆணையும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.
Tags :


















