இந்தியா முழுவதும் வரும் டிசம்பர் 26- ஆம் தேதியிலிருந்து ரயில் கட்டணங்கள் உயர்த்தப்படுகிறது.

by Admin / 21-12-2025 03:17:36pm
இந்தியா முழுவதும் வரும் டிசம்பர் 26- ஆம் தேதியிலிருந்து ரயில் கட்டணங்கள் உயர்த்தப்படுகிறது.

இந்தியா முழுவதும் வரும் டிசம்பர் 26 ஆம் தேதி யிலிருந்து ரயில் கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. நீண்ட தூர பயணிகளுக்கான இந்த சிறிய கட்டண உயர்வு மூலம் ரயில்வேக்கு சுமார் 600 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 215 கிலோ மீட்டருக்கு மேல் பயணிக்கும் போது கிலோமீட்டர் ஒரு பைசா உயர்த்தப்பட்டுள்ளதாகவும் ஏசி மற்றும் ஏசி இல்லாத வகுப்புகளில் கிலோமீட்டர் இரண்டு பைசா உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புறநகர் ரயில்கள் மாதாந்திர சீசன் டிக்கெட்டுகள் மற்றும் 215 கிலோ மீட்டருக்கு குறைவான சாதாரண வகுப்பு பயனங்களுக்கான கட்டணங்கள் உயர்வு இல்லை என்றும் அறிவிப்பு. குளிர்சாதன வசதி இல்லாத ரயிலில் 500 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்தால் கூடுதலாக 10 ரூபாய் உயர்வு. ரயில்களின் பராமரிப்பு செலவு அதிகரிப்பதின் காரணமாகவும் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கிலும் அதிக பணியாளர்களை நியமிக்க இருப்பதாலும் இந்த உயர்வு அவசியமாகிறது என்று ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது.

 

 

Tags :

Share via