சாத்தான்குளம் 50 அடி கிணற்றுக்குள் பாய்ந்த கார் 5 பேர் நிலையென்ன தொடரும் மீட்பு பணி.

தஞ்சாவூரைச் சேர்ந்தவர்கள் சாத்தான்குளம் அருகே உள்ள வெள்ளாளன்விளை பகுதியில் நாளை நடைபெற உள்ள திருமண நிகழ்ச்சிக்காக ஆம்னி காரில் 8 பேர் குடும்பத்துடன் வந்தபோது
சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளம் பகுதியில் சாலையோரம் இருந்த கிணற்றுக்குள் எதிர்பாராத விதமாக கார் கவிழ்ந்து விழுந்தது.
இதில் காரில் இருந்த ஒரு குழந்தை உள்பட 8 பேரும் கிணற்றுக்குள் மூழ்கினர். இதற்கிடையில் காருக்குள் இருந்த ஒரு பெண் உட்பட 3 பேர் காரை திறந்து கிணற்றில் இருந்து தப்பி வெளியே வந்துள்ளனர்.
தொடர்ந்து அந்த வழியாகச் சென்றவர்களிடம் நடந்த விபரத்தை கூறி அழுதுள்ளனர். அவர்கள் அருகே உள்ள மீரான்குளம் கிராம மக்களிடம் கூறி கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
கிணறு சுமார் 50 அடி ஆழத்திற்கு இருக்கும் என்பதால் பொதுமக்கள் யாரும் இறங்கி காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து கிராம மக்கள் அருகே உள்ள சாத்தான்குளம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த தீயணைப்பு மீட்ப்புபணித்துறையினர் கிணற்றுக்குள் பொதுமக்கள் உதவியுடன் இறங்கி காரியும்,காரில் சிக்கியவர்களை தேடி வருகின்றனர். மேலும் இரண்டு ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர். கிணற்றுக்குள் குழந்தை உள்பட 5 பேர் சிக்கியுள்ள சம்பவம் சாத்தான்குளம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிணற்றுக்குள் விழுந்த காரிலிருந்து வெளியேறி உயிர்தப்பியவர்கள் விபரம்:
1) ஜெர்சோன்
2) ஜெஸி ட்டா
3) ஷைனி கிருபாகரன்
கிணற்றுக்குள் விழுந்த காரில் சிக்கி இருப்பதாக கூறப்படும் நபர்கள்விபரம்:
1) வசந்தா
2) மோசஸ்
3) ரவி கோவில் பிச்சை
4) கெஞ்சி அல்கிருபா
5) ஷாலினி
Tags : சாத்தான்குளம் 50 அடி கிணற்றுக்குள் பாய்ந்த கார் 5 பேர் நிலையென்ன தொடரும் மீட்பு பணி.