by Staff /
11-07-2023
02:29:18pm
ஹரியானா மாநிலம் அம்பாலாவில் தொடர் கனமழையால் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சமன் வாடிகா கன்யா குருகுலப் பள்ளியில் 730 மாணவிகள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். இந்த சம்பவம் குறித்து ராணுவ அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அம்பாலா பகுதி மக்கள் மற்றும் போலீசார் உதவியுடன் 730 மாணவிகள் மீட்கப்பட்டனர். மேலும் வெள்ளம் காரணமாக மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளது.
Tags :
Share via