by Staff /
11-07-2023
02:39:51pm
வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் ஜூலை 10 ஆம் தேதி திங்கள்கிழமை இரவு 8.28 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையத்தின்படி, நிலநடுக்கம் ஏற்பட்ட போது ரிக்டர் அளவுகோலில் அதன் அளவு 6.4 ஆக பதிவாகி உள்ளது. கடலுக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஆன்டிகுவா மற்றும் பர்புடா பகுதிகளில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகியுள்ளது.
Tags :
Share via