காங்கிரஸ் மூத்த தலைவர்  ப. சிதம்பரம் தமிழக முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் சந்திப்பு

by Admin / 03-03-2026 02:35:18pm
காங்கிரஸ் மூத்த தலைவர்  ப. சிதம்பரம் தமிழக முதலமைச்சர் மு. க .ஸ்டாலின்  சந்திப்பு

 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு குறித்த சிக்கல்களை தீர்க்க உயர்மட்ட சந்திப்பாக முன்னாள் நிதி மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான  ப. சிதம்பரம் தமிழக முதலமைச்சர் மு. க .ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தார். காங்கிரஸ் கட்சி சுமார் 39 முதல் 41 தொகுதிகள்  மற்றும்  இரண்டு மாநிலங்களவை இடங்களை கோாி  வருகிறது. ஆனால் , திமுக தலைமை 25 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடத்தை  மட்டுமே வழங்க முன் வந்துள்ளது . இதன் காரணமாக ப. சிதம்பரத்துடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகையும் முதலமைச்சரை என்று சந்தித்து பேசினர். தொகுதி பங்கீட்டில்  ஒருமித்த  கருத்து எட்டப்படாதால் கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் பரவிய நிலையில், அதை சரி செய்யும் முயற்சியாக இந்த சந்திப்பு  நிகழ்கிறது. மார்ச் 15ஆம் தேதி  நடைபெறவிருக்கும்  மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலுக்கு  இன்னும்  சில தினங்களில்  உள்ளதால் இந்த உயர்மட்ட பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

 

 

Tags :

Share via
Logo