5 கோடி மதிப்புள்ள அரசு புறம்போக்கு நிலத்தை மிட்ட வருவாய்த்துறையினர்.

by Editor / 09-01-2024 10:50:50pm
5 கோடி மதிப்புள்ள அரசு புறம்போக்கு நிலத்தை மிட்ட வருவாய்த்துறையினர்.

தென்காசி மாவட்டம்  புளியங்குடி நகராட்சிக்குட்பட்ட இந்திரா நகர் பகுதியில்  புளியங்குடி முன்னாள் நகராட்சி ஆணையாளர் பவுன்ராஜ் என்பவரது( புளியங்குடி நகராட்சி சேர்மன் விஜயா சௌந்தர பாண்டியன் )தாயார்  மம்முது  வீடு உள்ளது.இவரது  வீட்டை சுற்றிலும் மூன்று ஏக்கர் நிலம் உள்ளது. அதில்   சுமார் 60 சென்ட் அரசு புறம்போக்கு நிலம் மற்றும் நடை பாதை   ஆக்கிரமிப்பில் உள்ளது. மேலும் அதே பகுதியைச் சேர்ந்த இசக்கி ராஜ் என்பவர் செங்கல் சூளை வைத்துள்ளார் அவர் சுமார் 1 3/4 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து உள்ளதையும் சேர்த்து சுமார் 2.5 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பில்  இருந்துவந்துள்ளது.இதனைத்தொடர்ந்து.மாவட்ட ஆட்சித் தலைவர் துரை ரவிச்சந்திரன் வாய்மொழி உத்தரவின் பேரில் தென்காசி கோட்டாட்சியர் லாவன்யா மற்றும் கடையநல்லூர் தாசில்தார் கங்காதேவி தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களை காவல்துறை அதிகாரிகனின் பாதுகாப்பில்  வேலி அமைத்து கையகப்டுத்தும் பணி நடைப்பெற்றது.ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இந்த புறம்போக்கு நிலத்தின்  அரசு தரப்பில் சந்தை மதிப்பு5 கோடி ரூபாய் ஆகும்,

இந்தநிலையத்தை அனைத்துத்துறை அதிகாரிகள் மின்னியல் வருவாய்த்துறையினர் வேலிபோட்டு தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தபோது தற்போதைய புளியங்குடி நகராட்சி சேர்மன் விஜயா சௌந்தர பாண்டியன் தனது மம்முது  தாயார் செல்வதற்கு தேவையான பாதையை வழி  விட்டு மீதியை கையகப்படுத்த அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தார் இருப்பினும் அதிகாரிகள் முழுமையான முறையில் இரண்டரை ஏக்கர் இடத்தையும் கையகப்படுத்தி முள்வேலி அமைத்து சென்றனர்.இந்த சம்பவம் புளியங்குடிப்பகுதியில் பரபரப்பை ஏற்ப்டுத்தியுள்ளது.

 

Tags : 5 கோடி மதிப்புள்ள அரசு புறம்போக்கு நிலத்தை மிட்ட வருவாய்த்துறையினர்.

Share via