தாய்லாந்து ரயில்.. கட்டுமான கிரேன் விழுந்து 32 போ் பலி
தாய்லாந்து சீக்கியோ மாவட்டம் வடகிழக்கு 143 மைல்கள் தொலைவில் உள்ள நக்கோன் ராச்சிமா மாகாணத்தில் பாங்காங்கில் இருந்து உபான் ராசஸ்தானிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருந்த ரயில், கட்டுமான பகுதிக்கு பயன்படுத்தப்பட்ட உயரமான கிரேன் கீழே சென்று கொண்டிருந்த ரயில் மீது விழுந்து ரயில் இரண்டு பாதியாக துண்டானது. இந்த விபத்தில் பல பெட்டிகள் தடம்புரண்டு தீ விபத்து ஏற்பட்டது. சிதைந்த ஈடுபாடுகளில் இருந்து சிக்கிய பயணிகளை மீட்க மீட்பு பணியாளர்கள் ஹைட்ராலிக் கட்டர்களை பயன்படுத்திமீட்டனர். இவ்விபத்தில் குறைந்தது 32 பேர் இறந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 64 இல் இருந்து 66 பேர் காயமடைந்துள்ளனர். ஏழு பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளனர். இந்த ரயிலில் மொத்தம் 195 பயணிகள் இருந்துள்ளனர் பெரும்பாலும் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆவர்.. காயமடைந்துவர்களில் ஒரு வயது குழந்தையும் 85 முதியவரும்அடங்குவர்..
Tags :


















