இந்தியா முழுவதும் வன்முறை மற்றும் போராட்டங்கள் வெடிக்க வாய்ப்பு - மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை

by Admin / 03-03-2026 12:27:51am
இந்தியா முழுவதும் வன்முறை மற்றும் போராட்டங்கள் வெடிக்க வாய்ப்பு - மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை

ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா போர் தொடுத்து வருவதின் காரணமாக இந்தியா முழுவதும் வன்முறை மற்றும் போராட்டங்கள் வெடிக்க வாய்ப்பு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக வெளியான செய்தியை தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக, ஜம்மு -காஷ்மீர்-லக்னோவில் ஜியா முஸ்லிம் பிரிவினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். பிப்ரவரி மாத இறுதியில் உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் அனுப்பிய கடிதத்தில் சர்வதேச நிகழ்வுகளால் உள்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது .மத வழிபாட்டு தலங்களில் ஆவேசமாக பேசும் ஈரான் ஆதரவு பேச்சாளர்களை அடையாளம் கண்டு கண்காணிக்கவும் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவுவதை தடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது .டெல்லி போன்ற நகரங்களில் உள்ள அமெரிக்க -இஸ்ரேல் மற்றும் ஈரான் தூதரகங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via