சட்டமன்றத்தில் தொகுதி மறுவரையறை எதிர்ப்பு மசோதாவை தாக்கல் செய்தாா்,முதலமைச்சா் விஜய்
இன்று தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் மத்திய அரசு கொண்டு வரவுள்ள தொகுதி மறுவரையறை சட்டத்திற்கு எதிராக தனி தீர்மானத்தை தாக்கல் செய்தார். தொகுதி மறு வரையறை சட்டத்தினால் தென்னிந்திய மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் என்கிற காரணத்தினால் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்பொழுது நாடாளுமன்ற மக்களவையில் 543 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கையை நிரந்தரமாக வைக்க வேண்டும் என்றும் இதில் எந்த மாற்றங்களும் வேண்டாம் என்றும் மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் குரல்களை இந்த தொகுதி மறு வரையறை சட்டம் நெறிக்கும் என்பதால் இது தேவையில்லை என்பதனால் இச்சட்ட வரைவு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மக்களவையில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் 2029 நாடாளுமன்றத் தேர்தலிலே 543 தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை விகிதத்தை 2.2:1 என்ற விகிதாச்சார அடிப்படையில் பராமரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொகுதி மறு வரை சட்டம் இன்னும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத பொழுது எதற்காக இதை இப்பொழுது எதிர்க்க வேண்டிய அவசியம் என்ன என்றும் எதிர் கட்சி தரப்பில் கேள்விகள் எழுந்துள்ளன.
Tags :


















