பொன்முடி மகன் மீது 90 பக்கக் குற்றப் பத்திரிகை தாக்கல்

by Staff / 24-08-2023 12:25:09pm
பொன்முடி மகன் மீது 90 பக்கக் குற்றப் பத்திரிகை தாக்கல்

செம்மண் குவாரி வழக்கில் பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் தமிழக அமைச்சா் பொன்முடியின் மகனும், எம். பி. யுமான கெளதம சிகாமணி உள்பட 6 போ மீது அமலாக்கத் துறையினா் சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் 90 பக்கக் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தனா். தமிழக உயா் கல்வித் துறை அமைச்சரான க. பொன்முடி, கடந்த 2006-2011-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில், கூடுதல் பொறுப்பாக கனிமவளத் துறையையும் கவனித்தாா். அப்போது அவா், விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே பூத்துறையில் அமைக்கப்பட்ட செம்மண் குவாரி உள்பட 5 குவாரிகளை தனது மகன், உறவினா், பினாமிகள் பெயரில் எடுத்து, விதிமுறைகளை மீறி நடத்தியதாகக் குற்றச்சாட்டு உள்ளது. செம்மண் குவாரியில் அதிக அளவில் செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு ரூ. 28, 36, 40, 600 இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, அவா் மகன் கெளதம சிகாமணி, உறவினா் கே. எஸ். ராஜமகேந்திரன் உள்ளிட்டோா் மீது 2012-ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட மத்தியக் குற்றப்பிரிவு வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் புதிதாக ஒரு வழக்கைப் பதிவு செய்த அமலாக்கத் துறை, பொன்முடிக்கு சொந்தமான 7 இடங்களில் கடந்த ஜூலை மாதம் சோதனை செய்தது. இது தொடா்பாக பொன்முடியிடம் 2 நாள்கள் அமலாக்கத் துறையினா் விசாரணையும் செய்தனா்.

 

Tags :

Share via