ஈரானிய போர்க்கப்பலை மூழ்கடித்த  கப்பலில் மூன்று ஆஸ்திரேலியா வீரர்கள்

by Admin / 06-03-2026 08:41:25am
 ஈரானிய போர்க்கப்பலை மூழ்கடித்த  கப்பலில் மூன்று ஆஸ்திரேலியா வீரர்கள்

இந்தியபெருங்கடலில்  ஈரானிய போர்க்கப்பலை மூழ்கடித்த  கப்பலில் மூன்று ஆஸ்திரேலியா வீரர்கள் இருந்தவை ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் உறுதிப்படுத்தி உள்ளார். அமெரிக்க கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் இலங்கையின் தெற்கு கடற்கரைக்கு அருகே சர்வதேச கடற்பரப்பில் ஈரானிய போர்க்கப்பலான ஐ ஆர் ஐ எஸ் டேனா மீது டர்பிடோ தாக்குதல் நடத்தி அதை மூழ்கடித்தது. இந்த நீர்மூழ்கி கப்பலில் மூன்று ஆஸ்திரேலிய கடற்படை வீரர்கள் இருந்தனர். அவர்கள்  பாதுகாப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அமெரிக்க நீர்மூழ்கி கப்பலில் பயிற்சி பெற்று வந்தனர். இந்த தாக்குதலில் குறைந்தது 87 ஈரானிய மாலுமிகு கொல்லப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கின்றன.. இலங்கை கடற் படையினர் 32 பேரை மீட்டு உள்ளனர் ,.ஐ ஆர் ஐ எஸ் டெனா கப்பல் இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற மிலன் 2026 கூட்டு கடற்படை பயிற்சி யில் பங்கேற்று விட்டு ஈரான் திரும்பிக் கொண்டிருந்த போது இந்த தாக்குதல் நடந்தது .இரண்டாம் உலக போருக்கு பின்னர் ஒரு அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் டர்பிடோ மூலம் எதிரி நாட்டின் கப்பலை மூழ்கடித்த முதல் சம்பவம் இதுவாகும். ஆஸ்திரேலிய வீரர்கள் இந்த போர் நடவடிக்கையில் நேரடியாக பங்கேற்கவில்லை என்றும் அவர்கள் நீண்ட கால பயிற்சி திட்டத்தின் ஒரு பகுதியாகவே அங்கு இருந்தனர் என்றும் ஆஸ்திரேலியா அரசு தெளிவுபடுத்தி உள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo