ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

by Admin / 26-04-2023 02:12:44pm
ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

 

ஆன்லைன் விளையாட்டின் காரணமாக பல இளைஞர்கள் தற்கொலை செய்ததை அடுத்து தமிழ்நாடு அரசு ஆன்லைன் விளையாட்டை தடை செய்வதற்கு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, இரண்டாவது முறையாக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் ஆளுநர் ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கினார் .இதன் காரணமாக ,ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் அந்த சேவையை வழங்குவதற்கு தமிழ்நாடு மட்டத்தில் விதிக்கப்பட்டதால், அதனை எதிர்த்து ஆன்லை தடை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் காணொளி வாயிலாக நீதிபதிகள் வைத்தியநாதன் கலைமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கு குறித்து கேட்டறிந்த நீதிபதிகள் வழக்கு அவசர வழக்காக எடுத்துக் கொள்வதற்கான காரணம் இருந்தால் நாளை விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்றும் இல்லாவிட்டால் இவ்வழக்கு சாதாரண வழக்காக பட்டியலில் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்தனர்.

 

Tags :

Share via