தனியார் சொகுசு விடுதியில் சிறப்பு உதவி ஆய்வாளர் தற்கொலை

by Editor / 13-08-2022 11:37:16am
தனியார் சொகுசு விடுதியில் சிறப்பு உதவி ஆய்வாளர் தற்கொலை

தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் சொகுசு விடுதியில் ரோட்டரி கிளப் விழாவுக்காக 30 பேர் வந்துள்ளனர். இதில் ஓய்வு பெற்ற நீதிபதியும்,ஜல்லிக்கட்டு குறித்த விசாரணை மேற் கொள்ளும் ஆணையத்தின்  ஆணையாளர் ராஜேஷ்வரன் என்பவர் அறை எடுத்து தங்கி இருந்துள்ளார். அவருக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக அவரது தனி பாதுகாப்பு அதிகாரியாக சென்னை புதுப்பேட்டை பட்டாலியனில் சிறப்பு உதவி ஆய்வாளராக பனியாற்றி வரும் பார்த்திபன் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் மற்றொரு அறையில் தங்கி இருந்துள்ளார்.

 இந்த நிலையில், அதிகாலை 6.30 மணியளவில் கழிப்பறை யில் பார்த்திபன் பாதுகாப்புக்காக வைத்திருந்த தனது துப்பாக்கியை எடுத்து தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

 இது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி அளித்த தகவலின் அடிப்படையில், அங்கு விரைந்து சென்ற குற்றாலம் போலீசார் சம்பவ இடத்தில் தற்போது விசாரணை மேற்கொண்டு வரும் சூழலில், முதற்கட்ட விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட பார்த்திபன் திருவள்ளுவர் மாவட்டம் திருத்தணி பகுதியை சேர்ந்தவர் என்பதும், அவருக்கு மனைவி தீபா மற்றும் யுவராஜ் என்ற மகனும்,கீஷீகா என்ற மகளும்  உள்ளனர். கடந்த 11 ஆம் தேதிதான் பார்த்தீபன் சென்னை புதுப்பேட்டை பட்டாலியனில் இருந்து வந்து தனி நீதிபதி ராஜேஸ்வரனுக்கு பழைய குற்றாலம் வருவதற்கு தனி பாதுகாப்பு அதிகாரியாக  இவர்  இருந்து வந்ததும் தெரிய வந்தது.

 இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பார்த்திபன் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும், அதனால் இது போன்ற தற்கொலை முடிவு எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

 மேலும், இது குறித்து போலீசார் பார்த்திபனின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.சம்பம் நடந்த சொகுசு விடுதியில் தென்காசி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் தலமையில் 2ஆய்வாளர்கள் விசாரனை நடத்தி வருகின்றனர். விடுதியில் யாரும் செல்ல தடை விதிக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

 

Tags :

Share via