அரசு மருத்துவமனையில் நோயாளி துாக்கு போட்டு தற்கொலை

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்றவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த பொன்னங்குப்பத்தை சேர்ந்தவர் சண்முக வேல் , 50: கூலித் தொழிலாளி. இவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர் கடந்த 22 ம் தேதி சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த 23 ம்தேதி அன்று வலது காலில், அறுவை சிகிச்சை செய்து உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார். அறுவை சிகிச்சை காரணமாக ஏற்பட்ட வலியால், நேற்று அதிகாலை ஒரு மணியளவில் வார்டில் உள்ள கழிவறைக்கு சென்று அங்கிருந்த ஜன்னலில் தனது வேட்டியால் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த விக்கிரவாண்டி போலீசார் மருத்துவ மனைக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
Tags :