முதல்வர் பதவியை இன்று ராஜினாமா செய்யும் நிதிஷ்குமார்
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, பீகாரில் அரசியல் களம் வேகமாக மாறி வருகிறது. முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஜேடியு மற்றும் ஆர்ஜேடி கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. கூட்டணியை முறித்துக் கொள்ள முதல்வர் நிதிஷ்குமார் தயாராகி விட்டதாக தெரிகிறது. பாஜக கூட்டணியுடன் கைகோர்க்க நிதிஷ்குமார் முனைப்புடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ்குமார் சனிக்கிழமை ராஜினாமா செய்யப் போவதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பாஜகவுடன் இணைந்து மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளதாகவும், பாஜகவுக்கு 2 துணை முதலமைச்சர்கள், சபாநாயகர் பதவிகள் வழங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்தியா கூட்டணியிலும் நிதிஷ்குமார், பெரும் அதிருப்தியில் உள்ளார்.
Tags :