விரைவில் குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி..?

by Editor / 21-10-2022 10:42:39am
விரைவில் குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி..?

டாஸ்டாக் மதுக்கடைகளில் மதுபாட்டில்கள் விற்பனை மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் வருமானம் கிடைத்து வருகிறது. குறிப்பாக 2020-21-ம் ஆண்டில் ரூ.33,811.15 கோடியும், 2021-22-ம் ஆண்டில் ரூ.36,013.14 கோடியும் அரசுக்கு வருவாய் கிடைத்தது. இந்த வரி வருவாயை மேலும் அதிகரிக்கும் வகையில் 1937-ம் ஆண்டு மது விலக்கு சட்டத்தில் திருத்தம் செய்யும் வகையில் மதுவிலக்கு திருத்த அவசர சட்டம் நேற்று முன்தினம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதனால் கடைகளில் மதுபானங்கள் விலை மேலும் உயரும் என தெரிகிறது. முதலில் வெளிநாட்டு மதுவகைகள் விலை உயர்த்தப்படும். அதன்பிறகு மற்ற மதுபானங்கள் விலை உயரும் என தெரிகிறது.

 

Tags :

Share via

More stories

Logo