ஆளுநர் நேரடியாக தலையிடுவதற்கோ அல்லது ஆய்வு செய்வதற்கோ எந்தவிதமான சட்டபூர்வ அதிகாரம் இல்லை.

by Admin / 03-07-2026 04:24:59pm
ஆளுநர் நேரடியாக தலையிடுவதற்கோ அல்லது ஆய்வு செய்வதற்கோ எந்தவிதமான சட்டபூர்வ அதிகாரம் இல்லை.

நேற்று மதுரை தனியார் கல்லூரி நிகழ்ச்சிக்காக வந்திருந்த தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் , வைகை ஆற்றில் நீர் இல்லாமல் வறண்டு குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் ராஜபவனை நேரடியாக களமிறங்கும் என வைகை ஆற்றை தூர்வாரி சுத்தப்படுத்தப்பட வேண்டும் என்கிற ஒரு கருத்தை முன் வைத்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பி இருந்தது. இந்நிலையில் தமிழக மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி .டி. ஆர் நிர்மல் குமார் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் நிர்வாக எல்லைகளுக்குள்ளும் திட்டங்களிலும் ஆளுநர் நேரடியாக தலையிடுவதற்கோ அல்லது ஆய்வு செய்வதற்கோ எந்தவிதமான சட்டபூர்வ அதிகாரம் இல்லை என்றும் மாநில அரசின் இறையாண்மை மற்றும் நிர்வாகத்தில் ஆளுநர் தேவை இன்றி தலையிட்டால் அதனை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றும் தமிழக அரசின் முறையான அனுமதி இல்லாமல் அரசு அதிகாரிகள் யாரும் ஆளுநர் நடத்தும் ஆய்வு கூட்டங்களில் பங்கேற்கவோ அல்லது ஒத்துழைக்கவோ கூடாது எனவும் தமிழக வெற்றிக்கழக அரசு பொறுப்பேற்ற இந்த குறுகிய காலத்திற்கு உள்ளாகவே வைகை அணை பகுதியை தாமே நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். அத்துடன் வைகை அணை கட்டப்பட்ட பிறகு இதுவரை தூர்வாரப்படாத நிலையில் தற்போது முதல் முறையாக தூர்வாரும் பணிகளை தொடங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அணை மற்றும் ஆற்றுப்பகுதிகளை தூர் வாருவதற்கு தேவையான நிதித்துறை அனுமதிகளும் ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியும் கோரப்பட்டு அதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories

Logo