தமிழக முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு .க .ஸ்டாலின் இன்று குடும்பத்துடன் லண்டன்பயணம்.

by Admin / 04-07-2026 11:34:16am
தமிழக முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு .க .ஸ்டாலின் இன்று குடும்பத்துடன் லண்டன்பயணம்.

தமிழக முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு .க .ஸ்டாலின் இன்று குடும்பத்துடன் லண்டன் புறப்பட்டு சென்றார். அவரது பேரனும் உதயநிதி ஸ்டாலின் மகனும் ஆன இன்பநிதி லண்டன் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற உள்ளார். பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இந்த பயணம் மேற்கொள்கிறார். இரண்டு வாரங்கள் அங்கே தங்கி இருந்து ஓய்வை மேற்கொண்ட பின்பு ஜூலை 20ஆம் தேதிக்கு மேல் வர உள்ளார். நிலையில் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் திமுகவின் உள்கட்டமைப்பை மாற்றி அமைக்க தங்கம் தென்னரசு கீதா ஜீவன் எஸ் எஸ் சிவசங்கர் சங்கரபாணி உள்ளிட்டம் 10 பேர் கொண்ட சிறப்பு சீர்திருத்த ஆலோசனை குழுவை அமைத்து உள்ளார். இக்குழுவினர் மாவட்டங்களின் எல்லைகளை மறுவரையரை செய்தல் சார்பு அணிகளை மறுசீரமைத்தல் நிரந்தர தேர்தல் மேலாண்மை அமைப்பை உருவாக்குதல்திங்ஆலோசனை குழுவை அமைப்பது என்று பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இக்குழு ஆகஸ்ட் முதல் வாரத்தில் தனது பரிந்துரைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இது குறித்து தம் எக்ஸ் தளத்தில், அறிவாலயத்திற்கு வரும் உடன் பிறப்புகள் நாங்க இருக்கோம். மீண்டும் வருவோம் என்று தரும் ஊக்கத்துடன் திமுகவின் அடுத்த நூறாண்டு கால பயணத்திற்கான திட்டமிடலை தொடங்கியுள்ளேன். இருந்தாலும், என் மனம் அறிவாலயத்தில் தான் இருக்கும் என பதிவு செய்துள்ளார்..

 

Tags :

Share via
Logo