கால்பந்து வீராங்கனை பிரியாவின் மரணத்தை அரசியலாக்க வேண்டாம் அமைச்சர் மா.சுப்ரமணியன்

by Staff / 15-11-2022 05:34:40pm
கால்பந்து வீராங்கனை பிரியாவின் மரணத்தை அரசியலாக்க வேண்டாம் அமைச்சர் மா.சுப்ரமணியன்

கால்பந்து வீராங்கனை பிரியாவின் மரணத்தை அரசியல் நோக்கத்துடன் அணுவது எந்த தலைவர்களுக்கும் அழகல்ல என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், மாணவி பிரியாவின் உயிரிழப்பு மிக துயரமான நிகழ்வு. அவரது குடும்பத்திற்கு நிவாரணம் ரூ. 10 லட்சம் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்கப்படும். பிரியாவுக்கு சிகிச்சைக்கு பிறகு பேட்டரி கால் பொருத்தப்படும் என கூறப்பட்ட நிலையில், இத்தகைய துயர சம்பவம் நடந்துவிட்டது.பிரியாவுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என கூறினார்.

 

Tags :

Share via