தி.மு.க .மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தமிழக முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான மு க. ஸ்டாலின்
இன்று அண்ணா அறிவாலய கலைஞர் அரங்கத்தில் நடந்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தமிழக முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான மு க. ஸ்டாலின் மாவட்ட செயலாளர் அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.கடந்த 2021 ஆம் ஆண்டு எந்த தொகுதிகளில் குறைந்த வாக்குகளில் வெற்றி பெற்றோமோ ,எந்த தொகுதிகளை இழந்தோமோ அதில் அதிகமாக கவனம் கொண்டு மாவட்டச் செயலாளர்கள் உழைக்க வேண்டும் என்றும் கட்சியில் சீனியாரிட்டி என்பதெல்லாம் இனி இருக்காது என்றும் உழைப்பவர்களுக்கு மட்டுமே கட்சியின் சரியான அங்கீகாரம் வழங்கப்படும் என்றும் தேவையற்ற பிரச்சனைகளை கட்சிக்குள் உருவாக்குபவர்கள், எந்த பொறுப்பில் இருந்தாலும் அகற்றப்படுவார்கள் என்றும் தெரிவித்ததோடு கட்சியை வலுப்படுத்த உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் தேர்தலுக்குப் பிறகு கட்சி வழங்கும் என்றும் தெரிவித்தார்..234 தொகுதிகளையும் நான் கண்காணிப்பு கொண்டிருப்பேன். எதுவும் தெரியாது என்றும்எவரும் நினைக்க வேண்டாம் என்றும்தனிப்பட்ட பிரச்சனைகளை கட்சிக்குள் கொண்டு வந்து கட்சியினுடைய வளர்ச்சியை பாதிக்கும்படி யாரும் ஈடுபடக்கூடாது என்றும் களத்தில் கடினமாக உழைத்து மக்களிடம் 2.0 திட்டத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
Tags :



















