பிரபல ரவுடி தொப்பை கணேஷ்காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டார்.

by Admin / 16-03-2026 03:56:11pm
பிரபல ரவுடி தொப்பை கணேஷ்காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டார்.

சென்னை மாதவரம் ரவுண்டானா அருகே இன்று காலை 5:45 மணி அளவில் பிரபல ரவுடி தொப்பை கணேஷ் என்கிற டில்லி கணேஷ் காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். ஐந்து கொலை வழக்குகள் மற்றும் கொள்ளை உள்பட 30க்கு மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவர் வியாசர் பாடியை சேர்ந்தவர். ஏ ப்ளஸ் வகை சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். சமீபத்தில் புழல் பகுதியில் ஒரு வீட்டில் புகுந்து 25 லட்சம் ரொக்கம் மற்றும் 15 சவரன் நகைகளை கொள்ளை அடித்த வழக்கில் இவரை காவல்துறையினர் தேடி வந்தனர். மாதவரம் ரவுண்டான அருகே இவரை பிடிக்க முயன்ற போது காவல்துறையினரை தாக்கி விட்டு தப்ப முயன்று உள்ளதாக கூறப்படுகிறது. இதில் காவல் ஆய்வாளர் தற்காப்பிற்காக துப்பாக்கியால் சுட்டதில் சம்பவ இடத்திலே இவர் உயிரிழந்தார். காவலர்கள் இரண்டு பேர் தற்பொழுது சிகிச்சை பெற்று வருகின்றனர். இவரது உடல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை பிணக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.

 

பிரபல ரவுடி தொப்பை கணேஷ்காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
 

Tags :

Share via