தில்லியில் கொரோனா தளர்வுகள் அறிவிப்பு

by Editor / 21-08-2021 05:29:21pm
தில்லியில் கொரோனா தளர்வுகள் அறிவிப்பு

தில்லியில் கடைகளுக்கு விதிக்கப்பட்ட நேரக் கட்டுப்பாடு திரும்பபெறப்பட்டுள்ளது. கொரோனா பரவல் குறைந்த நிலையில், தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பது வியாபாரிகளிடையே சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
உணவகங்கள், ஷாப்பிங் மால்கள் உள்பட அனைத்து கடைகளையும் இரவு 10 மணிக்கு மேலாக திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, திங்கள்கிழமை முதல் அமலுக்குவருகிறது.


இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட தில்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜரிவால், "தில்லியில் உள்ள சந்தைகள் 8 மணி வரை செயல்படவே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. கரோனா பரவல் குறைந்த நிலையில், இந்த கட்டுப்பாடு திரும்பபெறப்பட்டுள்ளது" என்றார்.

 

Tags :

Share via

More stories

Logo