ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு - சந்தேக நபரின் மேலும் புகைப்படங்கள்

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் சந்தேக நபரின் மேலும் புகைப்படங்களை என்ஐஏ பகிர்ந்துள்ளது. புகைப்படத்தில் பையுடன் நடந்து செல்வது தெரிகிறது. சந்தேக நபரை கைது செய்ய பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. இவரைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் 08029510900 அல்லது 8904241100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். ஏற்கனவே ரூ.10 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags :