சிவசங்கர் பாபா வழக்கு: சிபிசிஐடியிடம் 3 ஆசிரியைகள் ஆஜராகி விளக்கம்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில், கேளம்பாக்கத்தில் இயங்கிவரும் தனியார் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஆதரவாக செயல்பட்டதாக, பள்ளியின் ஆசிரியைகள் மற்றும் ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஐந்து ஆசிரியைகளுக்கு சம்மன் அளிக்கப்பட்டது. இந்நிலையில், அதில் மூன்று ஆசிரியைகள் சென்னையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். வழக்கு விசாரணை தொடர்பாக முழு ஒத்துழைப்பு அளிப்பதாக ஆசிரியைகள் தெரிவித்துள்ளதாக சிபிசிஐடி காவல்துறையினர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Tags :