கே.ஏ. செங்கோட்டையன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம்
 
 
                          அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்கும் கேஏ செங்கோட்டையின் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கழகத்தின் கொள்கை, குறிக்கோளுக்கும் ,கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் சட்ட, திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும் கழகத்தின் இருப்பவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்பது தெரிந்திருந்தும் அவர்களுடன் ஒன்றிணைந்து கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவ பெயரும் உண்டாக்கும் விதத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்ற காரணத்தினாலும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த கே. ஏ. செங்கோட்டையன் எம்.எல்.ஏ இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்... கழக உடன்பிறப்புகள் யாரும், இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்..
 
 
                                                      	
                          							
							Tags :



















