ரூ. 40 லட்சம் மதிப்பிலான சேலைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

by Editor / 09-04-2024 10:07:09am
ரூ. 40 லட்சம் மதிப்பிலான சேலைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கர்நாடக பிதார் மாவட்டத்திலுள்ள பசவகல்யாண தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் (ஏப்ரல் 8) சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை சோதனை செய்தபோது அதில் ஏராளமான சேலைகள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் சேலைகள் சூரத்தில் இருந்து சென்னைக்கு கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது. ஆனால், ஆவணங்கள் ஏதும் இல்லாததால் ரூ. 40 லட்சம் மதிப்பிலான சேலைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

 

Tags : ரூ. 40 லட்சம் மதிப்பிலான சேலைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Share via
Logo