தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் தொகுதி மறுவரையறை குறித்தான ஆலோசனைக் கூட்டம்

by Admin / 08-08-2026 12:22:27pm
தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் தொகுதி மறுவரையறை குறித்தான ஆலோசனைக் கூட்டம்

இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் கலை அரங்கின் மூன்றாவது தளத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்றமேலவை உறுப்பினர்கள் பங்கேற்கும் மத்திய அரசின் தொகுதி மறுவரையறை குறித்தான ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. டெல்லி தமிழ்நாடு இல்ல அலுவல் மூலமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மக்களவை மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு  அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டுவரவுள்ள புதிய தொகுதி மறுவரையறை மசோதாபால் தமிழ்நாட்டிற்கும் தென் மாநிலங்களுக்கும் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தில் ஏற்படக்கூடிய நன்மை தீமைகளை பற்றியும் தேர்தல் உரிமைகளை பாதுகாப்பதற்கான மாநில அரசின் கூட்டு முயற்சியையும் விவாதிக்கவே இக்கூட்டம் கூட்டப்படுகிறது.

 

Tags :

Share via

More stories

Logo