வனத்துறையினர் வசம் செல்கிறதா பழைய குற்றாலம் அருவி...அமைச்சர் திடீர் ஆய்வு.

by Editor / 23-08-2024 12:37:44am
வனத்துறையினர் வசம் செல்கிறதா பழைய குற்றாலம் அருவி...அமைச்சர் திடீர் ஆய்வு.

தென்காசிமாவட்ட மேற்குத் தொடர்ச்சிமலைப்பகுதிகளில் அருவிகளின் நகரமாக போற்றப்படும் குற்றாலம் பகுதியில் 5 அருவிகள் உள்ளன. பழைய குற்றாலம் அருவி, பிரதான அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி ஆகிய ஐந்து அருவிகள் உள்ளன, இந்த நிலையில் வனத்துறையினுடைய கட்டுப்பாட்டில் சிற்றருவி  உள்ளது.  இந்த நிலையில் பழைய குற்றாலம் அருவியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் சிறுவன் ஒருவன் அடித்துச் செல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து இந்த பகுதியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு காலை ஆறு மணி முதல் இரவு 8 மணி வரை நேர ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, 24 மணி நேரம் சுற்றுலா பயணிகள் குளிக்கலாம் என்று இருந்த அருவியில் நேர கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி நேரக்கட்டுப்பாடுகள் இல்லாமல் எப்போதுவேண்டுமானாலும் சுற்றுலாப்பயணிகள் கட்டுப்பாடு இல்லாமல் குளித்து வருகின்றனர். இந்த நிலையில் பழைய குற்றாலம் அருவி வனத்துறையினர் வசம் ஒப்படைப்பதற்கான முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக பரவலாக குற்றச்சாட்டுகள் இருந்தன அதனை மெய்ப்பிக்கும் வண்ணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த மாத நடைபெற்ற கூட்டத்தில் வனத்துறையினர் தங்களது கட்டுப்பாட்டில் பழைய குற்றாலம் அருவி ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர், மேலும் பொதுப்பணித்துறையினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர், இந்த நிலையில் பழைய குற்றாலம் அருவி ஆயிரப்பேரி  ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட பகுதியில்  உள்ளதால் வாகன வசூல் செய்யும் உரிமை ஆயிரப்பேரி ஊராட்சிமன்றத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் வனத்துறையினர் பழையகுற்றாலம் அருவியை தங்களது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக 22 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று காலை தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், மாவட்ட வனத்துறை அலுவலர் முருகன், உள்ளிட்ட குழுவினர் பழைய குற்றாலம் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டு சென்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது வனத்துறையினுடைய கட்டுப்பாட்டிற்குள் பழைய குற்றாலம் அருவி செல்ல வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

Tags : வனத்துறையினர் வசம் செல்கிறதா பழைய குற்றாலம் அருவி...அமைச்சர் திடீர் ஆய்வு.

Share via