சிறுமியை வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி: கடந்த 2019இல் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ராஜ்குமார் என்பவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. ராஜ்குமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து நீதிபதி தற்போது தீர்ப்பளித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார்.
Tags :