தமிழக வெற்றிக் கழகதேர்தல் பிரசாரக் குழுவின் ஆலோசனைக் கூட்டம்-பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அறிவிப்பு,,
தமிழக வெற்றி கழகத்தின் பிரச்சார குழுவின் கூட்டம் இன்று அதன் தலைமையகமான பனையூரில் மாலை நாலு மணிக்கு நடக்க உள்ளதாக அதன் பொதுச்செயலாளர் என். ஆனந்த் அறிக்கை.
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
தேர்தல் பிரசாரக் குழுவின் ஆலோசனைக் கூட்டம்
அனைவருக்கும் வணக்கம்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் பிரசாரப் பணிகளை மேற்கொள்ளும் குழுவை நம் வெற்றித் தலைவர் அவர்கள் ஏற்கெனவே அறிவித்திருக்கிறார்கள். இந்தக் குழு, நாளை (21.01.2026 புதன்கிழமை) மாலை 4.00 மணிக்கு, சென்னையில் உள்ள கழகத் தலைமை நிலையச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளது.
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் 234 தொகுதிகளிலும் ஆலோசனைக் கூட்டங்கள், பிரசாரக் கூட்டங்கள் உள்ளிட்டவற்றை நடத்துவது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருக்கிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் பிரசாரக் குழுவினர் மட்டுமே பங்கேற்பார்கள் என்பதைக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
இப்படிக்கு
என்.ஆனந்த்,
பொதுச் செயலாளர்,
தலைமை நிலையச் செயலகம்
(Party Headquarters Secretariat),
தமிழக வெற்றிக் கழகம்
Tags :


















