இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்துவதற்கு ஒப்புதல்
இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. மதுரை விமான நிலையம் சர்வேத அந்தஸ்து பெறுவதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து நேரடியாக மதுரைக்கு விமான சேவைகள் அதிகரிக்க வழிவகை ஏற்படும் குறிப்பாக தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் இதர நாடுகளுக்கு நேரடி விமானங்கள் இயக்கப்பட வாய்ப்புள்ளது இந்த மாற்றத்தால் தென்தமிழகத்தின் வர்த்தகம் தொழில் முதலீடுகள் மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட தென் தமிழகத்தின் முக்கிய ஆன்மிக தளங்களுக்கு வரும் சர்வதேச சுற்றுலா பயணிகளை வருகை அதிகரிக்கும் சர்வதேச அந்தஸ்து வழங்கப்பட்டதை அடுத்து குடிவரவு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு பயணிகளுக்கு சிறப்பான சேவைகள் வழங்கப்படும். 20024 அக்டோபர் முதல் மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்படும் அந்தஸ்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.
Tags :


















