பிறந்த குழந்தைகளை கொன்றதாக செவிலியர் மீது வழக்கு

by Editor / 05-10-2021 09:44:20am
பிறந்த குழந்தைகளை கொன்றதாக செவிலியர் மீது வழக்கு

பிரித்தானியாவில் உள்ள செஸ்டர் மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் செவிலியராக 31 வயதான லூசி லெட்பி என்பவர் பணிபுரிந்துள்ளார். இவர் 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளுக்கு மத்தியில் மட்டும் அந்த மருத்துவமனையில் ஐந்து ஆண் குழந்தைகள் மற்றும் மூன்று பெண் குழந்தைகள் என மொத்தம் எட்டு பேரை கொலை செய்துள்ளதாக லூசி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது மட்டுமின்றி மேலும் பத்து குழந்தைகளை கொல்ல முயற்சி செய்ததாகவும் லூசி மீது புகார் எழுந்துள்ளது. குறிப்பாக 2015 மட்டும் 2016 ஆம் ஆண்டுகளுக்கு இடையே மருத்துவமனையில் குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கையானது அதிகரித்து காணப்பட்டுள்ளது. இதன் காரணமாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்பொழுது தான் முதன் முதலாக லூசி 2018 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து 18வது முறையாக தற்பொழுது மீண்டும் அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இருப்பினும் இப்பொழுதும் கூட அவர் தன் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றங்களையும் மறுத்துள்ளார். குறிப்பாக செஸ்டர் பல்கலைக்கழக பட்டதாரியான லூசி ஒரு நேரத்தில் பிராச்சாரத்தில் மூன்று மில்லியன் பவுண்டுகள் பணம் திரட்டும் அளவிற்கு முக்கிய சேவையாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via