தக்கலை பெட்ரோல் பங்கில் ரூ. 23 லட்சம் கையாடல் மேலாளர் கைது

by Staff / 03-09-2024 04:25:13pm
தக்கலை பெட்ரோல் பங்கில் ரூ.   23 லட்சம் கையாடல் மேலாளர் கைது

தக்கலை அருகே உள்ள வெள்ளி கோடு பகுதியை சேர்ந்தவர் லாசர் (67). இவர் தக்கலை பத்மநாதபுரம் சாலையில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இங்கு மேலாளராக திங்கள் நகரை சேர்ந்த நிஜில் பிரேம்சன் கடந்த ஆண்டு பணியாற்றினார். அப்போது அவர் பல்கில் இருந்த உரிமையாளரின் க்யூ ஆர் கோடை தனது பெயரில் மாற்றி பணம் மோசடி செய்துள்ளார்.

இந்த நிலையில் உரிமையாளர் லாசர் கணக்குகளை ஆய்வு  செய்த போது மோசடி விவரம் தெரியவந்தது. இது குறித்து அவர் தக்கலை போலீசில் புகார் செய்தார். போலீஸ் விசாரணையில் நிஜில் பிரேம்சன் ரூ 23 லட்சம் கையாடல்  செய்தது தெரியவந்தது.

அதன் பேரில் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது நிஜில் பிரேம்சன் தலைமறைவானார்.  இதனை தொடர்ந்து தனிப்படையினர் நிஜில் செல்போன் சிக்னலை கண்காணித்த போது சென்னை, பெங்களூர் மற்றும் கேரளா போன்ற இடங்களில்  சுற்றித் திரிவதாக தெரிந்தது.

இந்த நிலையில் ஒருவருடத்துக்கு பின்னர் நேற்று மாலை நிஜில் பிரேம்சன் செல்போன் சிக்னல் சென்னை விமான நிலையம் அருகே காட்டியது. இதை தொடர்ந்து தனிப்படை  அங்கு சென்ற போது, அங்கு தனக்கு சொந்தமான சொகுசு காரில் வைத்து அவரை கைது செய்து, தக்கலைக்கு இன்று  கொண்டு வந்தனர். அவரது காரை  பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Tags :

Share via

More stories