செல்வம் பெருக செய்யும் அருகம்புல் வழிபாடு
விநாயகருக்கு ஏன் அருகம்புல் மாலையிடுகிறோம் விநாயகருக்கான வழிபாட்டில் அருகம்புல் மிக முக்கியமானதாக அமைகிறது.சிவன்,சக்தி,கணபதி இந்த மூன்று பேரின் சக்தியின் ரூபமே அருகம்புல்..
அருகம்புல் வழிபாட்டில் வர என்ன காரணம்?
அனலாசுரன் என்ற அரக்கன் தேவலோகத்திலிருக்கும் தேவர்களைத்துன்புறுத்திக்கொண்டிருந்தான்.
அவன் கண்களிலிருந்து வெளிப்படும் நெருப்பு தேவர்களை எரித்து சாம்பலாக்கிக்கொண்டிருந்தது.இவ்வரக்கனின்
கொடுஞ்செயலிருந்து தப்பிக்க வேண்டுமென்று எண்ணிய தேவர்கள் விநாயகரிடம் சரணடைந்தனர்.
விநாயகர், அனலரசனுடன் போர்புரிந்து,அவனை விழுங்கி விட்டார்.அரக்கனின் உடல் வெப்பம்
விநாயகரின் வயிற்றுக்குள் பெரும் பிரச்சனையாக மாறி உடல் முழுவதும் நெருப்பினால் தகிக்க ஆரம்பித்து விட்டது.
அதிலிருந்து விடுபட முடியாமல் விநாயகர் அவஸ்தைபட்ட பொழுது ,அவரை காக்கும் பொருட்டு சந்திரன் இதமான குளிர்நத சூழலை உருவாக்க அவர் தலைக்கு மேல் நின்று உதவினார்.பெருமாள் தாமரையையும் சிவபெருமான்
விநாயகரின் வயிற்றைச்சுற்றியபடி வெப்பத்தை போக்க நாகத்தையும் கொடுத்தார்.ஆனால்,சூடு தணிந்தபடில்லை.
முனிவர்கள் பல்வேறு திக்குகளிலிருந்து எடுத்து வந்த 21 அருகம்புல்லை கொடுக்கவும்.விநாயகர் சூட்டின் கொடுமையிலிருந்து விடுபட்டார்.
இந்நிகழ்விற்கு பின்பே விநாயகரை வழிபட வருபவர்கள் அருகம்புல்லை வைத்து வழிபட்டால் அவரு்களுக்கு நற்பலன்களை வாரி வழங்குகிறார்.21அருகம்புல்லை கொண்டு செய்யப்படும் பூைஜயே விநாயகரை மகிழ்விப்பதால் நாமும் அருகம்புல்லை கொண்டு 21 முடிச்சிட்டு மாலையாக்கி....அவருக்குச்சூட்டி மகிழ்வோம்.
Tags :