இந்தியா-பாகிஸ்தான் போரில் அமெரிக்காவின் தலையீடு? மறுப்பு அமைச்சர் ஜெய்சங்கர்,

மக்களவையில் நேற்று (ஜூலை 28) முதல் ஆபரேஷன் சிந்தூர் குறித்த சிறப்பு விவாதம் நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விக்கு அரசுத்தரப்பு பதில் அளித்து வருகிறது. அப்போது பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், "பிரதமர் மோடிக்கும், அமெரிக்க அதிபர் டிரம்புக்கும் இடையே, ஏப்ரல் 22 முதல் ஜூன் 17 வரை எந்த தொலைபேசி உரையாடலும் நடக்கவில்லை" என தெரிவித்துள்ளார்.
Tags :