நாளை தஞ்சாவூர் தமிழக வெற்றி கழகத்தின் பிரச்சார கூட்டத்தில் கட்சி தலைவர் விஜய் கலந்து கொள்ள உள்ளார்.

by Admin / 03-03-2026 08:37:13pm
நாளை தஞ்சாவூர் தமிழக வெற்றி கழகத்தின் பிரச்சார கூட்டத்தில் கட்சி தலைவர் விஜய் கலந்து கொள்ள உள்ளார்.

நாளை தஞ்சாவூர் பூதலூர் அடுத்த அய்யாசாமி பட்டி மைதானத்தில் பகல் 11.00 மணி முதல் 3.00 மணி வரை நடைபெற உள்ள தமிழக வெற்றி கழகத்தின் பிரச்சார கூட்டத்தில் கட்சி தலைவர் விஜய் கலந்து கொள்ள உள்ளார். நாலாயிரத்து தொள்ளாயிரம் பேர் கலந்து கொள்ள உள்ள இந்த நிகழ்வில் க்யூ ஆர் கோட் அடிப்படையில் தொண்டர்கள் நிகழ்வில் அனுமதிக்கப்பட உள்ளனர். இன்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஷி ஆனந்த் கூட்டத்திற்காக செய்யப்பட்டு இருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். இக்கூட்டத்தில் பாதுகாப்பு கருதி கர்ப்பிணி பெண்கள் ,சிறுவர், சிறுமிய,ர் பள்ளி மாணவ -மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், உடல் நலம் குன்றியவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என்றும் பிரச்சார வாகனத்தை இருசக்கர வாகனங்களிலோ அல்லது வேறு வகையில் வாகனங்கள் பின்தொடர்வதை அறவே தவிர்த்திட வேண்டும் என்றும் காவல்துறையின் வழிகாட்டு நெறிமுறைப்படி ஊடகவியலாளர்களுக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் நேரலை இணைப்பு வழங்க உள்ளதால் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் ஊடகங்கள் மற்றும் தனி நபர்களின் ட்ரோன்களுக்கு அனுமதி இல்லை என்றும் பொதுச்செயலாளர் ஆனந்த் தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories