விசாரணை அறிக்கையில் போலே பாபாவின் பெயர் இல்லை

ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு சமர்பித்த விசாரணை அறிக்கையில் சாமியார் போலே பாபாவின் பெயர் இடம்பெறவில்லை. இச்சம்பவம் தொடர்பாக 2 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு 855 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை உத்தரப் பிரதேச அரசிடம் சமர்ப்பித்தது. இந்நிலையில், விபத்து நடந்த விதம், உயிரிழந்தோரின் விபரங்கள் உள்ளிட்டவை அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்யாமல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியுள்ளதாக மட்டுமே அறிக்கையில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :