அமெரிக்காவின் போயிங் கேசி-135 ஸ்ட்ராடோடேங்கர்
ஈராக்கின் மேற்குப் பகுதியில் அமெரிக்காவின் போயிங் கேசி-135 ஸ்ட்ராடோடேங்கர் என்ற வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானம் விபத்துக்குள்ளானது. இரண்டு விமானங்கள் சம்பந்தப்பட்ட இந்த விபத்தில், ஒரு விமானம் மேற்கு ஈராக்கில் விழுந்து நொறுங்கியது. மற்றொரு விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.விபத்துக்குள்ளான விமானத்தில் 6 ஊழியர்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் நிலை குறித்த தகவல்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.இந்த விபத்து எதிரிகளின் தாக்குதலாலோ அல்லது தவறுதலான துப்பாக்கிச் சூட்டினாலோஏற்படவில்லை என்று அமெரிக்காவின் மத்திய கட்டளை தெரிவித்துள்ளது .ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின்'ஆபரேஷன் எபிக் ப்யூரி' ' நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த விமானம் நட்பு வான்வெளியில் பறந்து கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது.
Tags :


















