14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை, சித்தப்பாபோக்சோ சட்டத்தின் கீழ் கைது
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் தாடே பள்ளிக்கூடேம் பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவரது தந்தை மற்றும் சித்தப்பா உடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.
சிறுமியின் தந்தை மற்றும் சித்தப்பாவுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அவர்களது மனைவிகள் இருவரும் கணவரிடம் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களது தாய் வீட்டிற்கு சென்று விட்டனர்.
சிறுமி மட்டும் இவர்களுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் மது போதையில் வீட்டுக்கு வரும் தந்தை மற்றும் சித்தப்பா சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளனர்.
இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். இதனால் மாணவி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார்.
இந்த நிலையில் தந்தையும் சித்தப்பாவும் சேர்ந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் விவகாரம் அக்கம்பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியவந்தது.
இதுகுறித்து தாடே பள்ளிகூடேம் மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.
இதையடுத்து சிறுமியின் தந்தை, சித்தப்பாவை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். சிறுமியை மீட்டு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
Tags :



















