நிபா வைரஸ்பரவல் :சபரிமலை மாதாந்திர பூஜை வழிகாட்டு நெறிமுறை
கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா பரவுவதைக் கருத்தில் கொண்டு, சபரிமலைக்கு மாதாந்திர பூஜைக்கு கோவில் நடை திறக்கும் போது, தேவைப்பட்டால், அதற்கான வழிகாட்டுதல்களை வெளியிடுமாறு கேரள உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மாநில அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளது. திருவிதாங்கூர் தேவசம் போர்டு கமிஷனர், சுகாதாரத்துறை செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சபரிமலை கோவில் ஒவ்வொரு மலையாள மாதத்திலும் ஐந்து நாட்களுக்கு திறக்கப்படுவைத்து வழக்கமாக இருந்துவருகிறது.புரட்டாசி மாதப்பிறப்பை முன்னிட்டு இந்த மாதம், நாளை ஞாயிற்றுக்கிழமை நடை திறக்கப்படவுள்ளது. கோழிக்கோட்டில் வெள்ளிக்கிழமை புதிதாக நிபா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆகவும்,பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆகவும் உயர்ந்துள்ளது.
Tags : நிபா வைரஸ்பரவல் :சபரிமலை மாதாந்திர பூஜை


















