முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க உத்தரவிடக்கோரி, நெல்லையை சேர்ந்த முருகன் என்பவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதிகள் கங்க பூர்வாலா, குமரப்பன் அமர்வில் 31 ஆம் தேதியான நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வலக்கை விசாரித்த நீதிபதிகள் மத்திய அரசின் சார்பில், பிரதமர் அலுவலக பரிந்துரையின் அடிப்படையில், குடியரசுத் தலைவர்தான் பாரத ரத்னா விருது குறித்து முடிவு செய்வார் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தனிப்பட்ட நபருக்கு பாரத ரத்னா விருது வழங்க நீதிமன்றம் பரிந்துரை செய்ய இயலாது என்று தெரிவித்து, நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.
Tags : கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது