தமிழ்நாட்டில் திங்கள் காலை 10.00 மணிக்கு பிளஸ் டூ மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெறுகிறது.

by Admin / 01-03-2026 06:45:27pm
 தமிழ்நாட்டில் திங்கள் காலை 10.00 மணிக்கு பிளஸ் டூ மாணவர்களுக்கான பொதுத்தேர்வு  நடைபெறுகிறது.

 

திங்கள் காலை 10.00 மணிக்கு பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறுகிறது .தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 7,545 பள்ளிகளைச் சேர்ந்த எட்டு லட்சத்து 27 ஆயிரம் மாணவ -மாணவிகள் 3,412 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். மார்ச் 2-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது. 7.99 லட்சபள்ளி மாணவர்கள் மற்றும் 2,783 தனி தேர்வர்களும் தேர்வை எழுத உள்ளனர். காலை 10 மணிக்கு தொடங்கும் தேர்வு மதியம்1.15க்கு நிறைவு பெறுகிறது. மாணவர்கள் ஹால் டிக்கெட்டுகளை சரி பார்த்து முன்கூட்டியே தேர்வு மையத்திற்கு எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.. தேர்வு  எழுதும் மாணவர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் தம் எக்ஸ் தல பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo