புனித ஸ்தலமான குற்றால அருவியில் நீராடி மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்.

கேரளா மாநிலத்தில் பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை தொடங்குவதை முன்னிட்டு கார்த்திகை 1-ஆம் தேதி ஆனா இன்று புனித சுற்றுலா தனமான குற்றால மெயின் அருவியில் நீராடி அருவி கரையில் உள்ள விநாயகர் கோவிலில் காலை முதல் மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்.இன்று காலை முதல் தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வரும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் குற்றால மெயின் அருவி கரையில் நீராடி அறிவிப்பகுதியில் அமைந்துள்ள விநாயகர் கோவிலில் சுவாமியே சரணம் ஐயப்பா என்கிற கோஷங்கள் முழங்க மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனர். மேலும் ஐயப்பன் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பும் வெளியூர் பக்தர்கள் குற்றால அருவியில் நீராடிவிட்டு தங்களது ஊருக்கு திரும்பி வருகின்றனர். இதனால் குற்றால அருவி பகுதியில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
Tags : புனித ஸ்தலமான குற்றால அருவியில் நீராடி மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்.